எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

X
ஜெயங்கொண்டம், ஜன.17- ஜெயங்கொண்டத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஜெ.கே என் ராமஜெயலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக. முன்னாள் எம் எல் ஏவும் மாவட்ட அவை தலைவருமான ஜெ.கே.என். ராமஜெயலிங்கம், தலைமையில் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பாக உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதாவின் திரு உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக நகர செயலாளர் பி.ஆர் செல்வராஜ் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் மாநில எம் ஜி ஆர் மன்ற இளைஞரணி துணை செயலாளர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் ஜெ.கொ.சிவா, அம்மா பேரவை மாவட்டத் துணைச் செயலாளர் கே.கே.சி செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தங்கபிச்சமுத்து, ஒன்றிய செயலாளர் விக்கிரமபாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜா ரவி, மாவட்ட அம்மா பேரவை மற்றும் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story

