நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் அஇஅதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
வீரசோழன் மற்றும் உடைய சேர்வைக்காரன் பட்டி பகுதிகளில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் அஇஅதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம். நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் முன்னிலையில், வீரசோழன் திமுக நகர துணைச் செயலாளர் அதிமுகவில் இணைந்தார். விருதுநகர் மாவட்டம் வீரசோழன் மற்றும் மலேசியாவைக்காரன்பட்டி பகுதிகளில் நரிக்குடியை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அம்மன் பட்டி ரவிச்சந்திரன் தலைமையில் புரட்சித் தலைவர் அவர்களின் எட்டாவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. வீரசோழன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இதனை எடுத்து வீரசோழன் திமுக நகர துணைச் செயலாளர் அப்துல்நாஸர் திமுகவில் இருந்து விலகி தன்னை ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன் பட்டி ரவிச்சந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இணைந்த அப்துல்நாஸருக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் அதிமுக சால்வை மற்றும் வேஷ்டி அணிவித்து அவரை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து நரிக்குடி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உடைய சேர்வைக்காரன் பட்டி பகுதியில் கிளைச் செயலாளர்கள் மேகவர்ணம், சரவணக்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் ஏழை எளிய மக்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தினை நரிக்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் வீரபாண்டி, ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் அங்குராஜ், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சாந்தி தவமுத்து, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன், மீனவரணி ஒன்றிய செயலாளர் போஸ், நகரச் செயலாளர்கள் பரமேஸ்வரன், கருமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், கோபால கிருஷ்ணன் மற்றும் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைக் கழகச் செயலாளர்கள், பிறஅணிச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Next Story



