சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஊதியூர் உச்சி பிள்ளையாருக்கு 108 மூலிகை அபிஷேகம்

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஊதியூர் உச்சி பிள்ளையாருக்கு 108 மூலிகை அபிஷேகம்
காங்கேயம் அடுத்த ஊதியூரில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு உச்சி பிள்ளையாருக்கு 108 மூலிகை அபிஷேகம்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஊதியூர் உச்சி பிள்ளையாருக்கு 108 மூலிகை அபிஷேகம் நடைபெற்றது. காங்கேயம் அடுத்துள்ள ஊதியூரில் கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்த பொன்னூதி மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் பிரசித்தி பெற்ற உச்சிப்பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு பூஜைகள்,அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று தை மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 108 மூலிகை பொடிகளை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் ஊதியூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிறைவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story