சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது

X
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே துலுக்கன்குறிச்சியில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கடந்த தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி உள்ளனர் என விமர்சனம் செய்த மணிகண்டன் அரசு பள்ளி மாணவர் களுக்கு அதிமுக ஆட்சியில் 7.5% சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் மருத்துவக்கனவை நினைவாக்கியது எடப்பாடி பழனிச்சாமி என்றார். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் பொங்கல் பரிசாக 3000 ரூபாய் வழங்கப்படும் என்றார். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் சென்னையில் நடைபெற்ற ஃபார்முலா 4 ரேஸ் கார் பந்தயத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது எனவும் அதிமுக ஆட்சி அமைந்த உடன் திமுக ஆட்சி நடைபெற்ற ஊழல்களுக்கு திமுகவினர் கண்டிப்பாக பதில் சொல்லி ஆக வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பார் என்றார். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறிவிட்டதாகவும் திமுக தான் பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாக விமர்சனம் செய்தார். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திமுக இறுமாப்போடு 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 சீட்டு வெல்லும் என கூறி வருவதாகவும் ஆனால் 20 சீட்டை கூட திமுக வெற்றி பெறாது என்றார். பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கடந்த சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக தனித்து நின்றது போல் தைரியம் இருந்தால் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனித்து நிற்க முடியுமா என கேள்வி எழுப்பினார். அதே போல் திமுக தனித்து நின்றால் அதிமுகவும் தனித்து நிற்கும் எனவும் திமுகவால் ஒருபோதும் தனியாக நின்று வெற்றி பெற முடியாது என விமர்சனம் செய்தார். மேலும் தமிழக கோவில்களின் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது என குற்றம் சாட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அறநிலையத்துறை துறை அமைச்சர் பெறப்பட்ட தங்கத்தின் அளவு குறித்து அறிக்கை வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி கடல் பெற்றதாக திமுகவினர் கூறியதற்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் 4 லட்சம் கோடி கடன் என்பது அதிமுக ஆட்சியில் மட்டும் பெறப்படவில்லை எனவும் திமுக அதிமுக ஆட்சியில் பெறப்பட்டது என்றார். ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் திமுக 4.5 லட்சம் கோடி கடன் பெற்று திவால் ஆகும் நிலையில் உள்ளதாக விமர்சனம் செய்தார்.
Next Story

