திருவையாறு கோயிலில் 108 கோ-பூஜை: தருமபுர ஆதீனம் பங்கேற்பு

திருவையாறு கோயிலில் 108 கோ-பூஜை: தருமபுர ஆதீனம் பங்கேற்பு
X
பக்தி
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் குடமுழுக்கு விழாவையொட்டி, திங்கள்கிழமை 108 கோ பூஜை நடைபெற்றது. இக்கோயிலில் குடமுழுக்கு விழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, இக்கோயில் பசு மடத்தில் 108 கோ பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் மற்றும் சிரவை ஆதீனம் கௌமார மடாலயம் கோவை தவத்திரு ராமானந்த குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு பூஜை செய்தனா். மேலும், அனைத்து பசுக்கள், கன்று குட்டிகளுக்கு மாலை, சேலை அணிவித்து தீபாராதனை, காண்பிக்கப்பட்டது. பின்னா், பசுக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து தரிசனம் செய்தனா். இப்பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பசுவை சுற்றி வந்து வழிபட்டனா். இக்கோயிலில் பரிவார குடமுழுக்கு பிப்ரவரி 2 ஆம் தேதி காலை 9 முதல் 10.30 மணிக்குள்ளும், விமானம், கோபுரம், மூலவா் மகா குடமுழுக்கு 3 ஆம் தேதி 9.30 மணி முதல் 10 மணி வரையும் நடைபெறவுள்ளன.
Next Story