கிருஷ்ணகிரி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்.

கிருஷ்ணகிரி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்.
X
கிருஷ்ணகிரி அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகே உள்ள குலுசாமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் இவரது மனைவி கீதாஞ்சலி (24). கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவவலி ஏற்பட்டது. இதை அடுத்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே ஆம்புலன்ஸ் வந்து போது அதிக வலியால் கீதாஞ்சலி அவதிப்பட்டார். இதனால் ஆம்புலன்சை டிரைவர் சாலை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தினார். பின்னர் ஆம்புலன்சில் இருந்து மருத்துவ உதவியாளர் சிவரஞ்சனி என்பவர், கீதாஞ்சலிக்கு பிரசவம் பார்த்தார். அப்போது அவருக்கு சுகப்பிரசவமாக அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயையும், குழந்தையையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
Next Story