உதகை அருகேயுள்ள மஞ்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை க்கு கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழி மறித்த ஏழு காட்டு யானைக் கூட்டம்...

X
உதகை அருகேயுள்ள மஞ்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை க்கு கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழி மறித்த ஏழு காட்டு யானைக் கூட்டம்... நீலகிரி மாவட்டம் உதகை அருகே மஞ்சூர் அரசு மருத்துவ மனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக மஞ்சூர் - கெத்தை வழியாக கோவைக்கு கொண்டு சென்றனர். அப்போது சாலையின் குறுக்கே ஏழு காட்டு யானைகள் வழியை மறித்து நின்றிருந்ததால் மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்க முடியாமல் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி வெகு நேரமாக காத்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுக்குள் சென்றதால் தொடர்ந்து கோவைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி சென்றனர்.
Next Story

