தீபாவளியை முன்னிட்டு தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்

X
திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் சேவை 36 ஆம்புலன்ஸ்களும், ஒரு இருசக்கர வாகன ஆம்புலன்ஸும் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. அழைப்பு கிடைத்த 5 முதல் ஏழு நிமிடங்களில் சேவை அளிக்கப்படும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், காவல் நிலையங்கள், மக்கள் அதிகமாக கூடும் விபத்து நடக்கும் இடங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆம்புலன்ஸ்கள் விரைந்து செயல்படுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளன. தீபாவளி முன்னிட்டு 19,20,21 ஆகிய 3 நாட்கள் அதிக அவசர அழைப்புகள் வரும் என்பதை கருத்தில் கொண்டு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் 108 ஆம்புலன்ஸ்களில் தேவைக்கேற்ப வைக்கப்பட்டுள்ளது. மேலும் தீக்காயங்கள் சம்பந்தமாக அதிக அழைப்புகள் வரும் என்பதால் அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் பான்ஸ் கிட் வழங்கப்பட்டுள்ளது தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரம் செயல்பட்டு மக்களுக்கு மருத்துவ சேவையை துரிதமாக வழங்கும் என்று அவசர மேலாண்மை மாவட்ட மேலாளர் ராம்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சுடலைமுத்து ஆகியோர் தெரிவித்தனர்.
Next Story

