கூலிப்பட்டி சிவ ஆலயத்தில் கார்திக்கை மாத சோமவார திங்கள் தினத்தை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம்,திருவாசகம் முற்றோதல் நிகழ்வு!

X
Namakkal King 24x7 |17 Nov 2025 8:24 PM ISTஜம்புகேஸ்வரர் பிரதோஷ வழிபாட்டுக் குழு சிவனடியார் திருக்கூட்டம் செய்து இருந்தனர்.
கூலிப்பட்டி முருகன் கோவிலில் மலை மீது இருக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் சிவ ஆலயத்தில், கார்த்திகை மாத சோம வாரதிங்கள் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் பிரதோஷ வழிபாட்டு சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், காலை 8 மணிக்கு கோவில் வளாகம் முன் 108 சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் கலசம், 108 சங்கு அபிஷேகம் பின் அலங்காரம் பஞ்சதீபம் உட்பட மஹா தீபம் காண்பிக்கப்பட்டது பின் தமிழ் வேதமாகிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றன அப்போது நடராஜ பெருமான் திருவுருவப்படத்திற்கு மலர்களால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை,ஜம்புகேஸ்வரர் பிரதோஷ வழிபாட்டுக் குழு சிவனடியார் திருக்கூட்டம் செய்து இருந்தனர்.மாதந்தோறும் ஒவ்வொரு திங்கட்கிழமையன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
Next Story
