கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் இரட்டை சிவாலயத்தில் 108 சங்காபிஷேக விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு

X
Arani King 24x7 |16 Dec 2025 9:20 PM ISTகண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர், காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயத்தில் 108 சங்காபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர், காசி விஸ்வநாதர் இரட்டை சிவாலயத்தில் 108 சங்காபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது. கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பழமையான இரட்டை சிவலாயம் உள்ளது. இக்கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருடந்தோறும் கார்த்திகை மாத கடைசி திங்களில் நடைபெறும் 108 சங்காபிஷேக விழா திங்கள்கிழமை இரவு சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி கோயில் உள் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு, 108 சங்குகளில் புனிதநீர் வைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து மூலவர்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
