ராமநாதபுரம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |30 Jan 2026 5:42 PM IST108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை தமிழக அரசு கொத்தடிமைகளாக நடத்தி வருவதாகவும் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவதால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களை தமிழக அரசு கொத்தடிமைகளாக நடத்தி வருவதாகவும் குறைந்த சம்பளத்தில் பணியாற்றுவதால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இதில் தமிழகம் முழுவதும் சுமார் 6000 மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள் இதில் 12 மணி நேரம் வேலை நேரமாக பணியாற்றி வருவதால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர் குறைந்த சம்பளத்தில் பணியாற்றிய வருபவர்களை கொத்தடிமை போல் நடத்தப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்பதை வலியுறுத்தியும் விலைவாசிக்கு ஏற்ற வகையில் 30 சதவீதம் ஊதிய உயர்வு உயர்த்தி வழங்க வேண்டும் நிர்வாகத்தின் சட்ட விரோத தொழிலாளர் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருப்பதை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் இருந்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
Next Story



