வீட்டின் பூட்டை உடைத்து 109 கிராம் தங்க நகை கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து 109 கிராம் தங்க நகை கொள்ளை
X
திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 109 கிராம் தங்க நகை கொள்ளை
திண்டுக்கல், வாழைக்காய்பட்டி வாசிமலை நகர் பகுதியில் சேர்ந்த ஆதிமூலம் மனைவி சுமதி இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகள் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை சென்று இன்று வீட்டிற்கு வந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 109 கிராம் தங்க நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது. மேற்படி சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story