அதிமுக ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 109 வது கோல போட்டி மற்றும் சிறுவர் சிறுமிகளின் விளையாட்டு போட்டி...

X
Rasipuram King 24x7 |16 Jan 2026 8:31 PM ISTஅதிமுக ராசிபுரம் நகர கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 109 வது கோல போட்டி மற்றும் சிறுவர் சிறுமிகளின் விளையாட்டு போட்டி...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் உத்தரவின் பெயரில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி அதிமுக நகர கழகத்தின் இராசிபுரம் நகர 1 வது வார்டு கழகத்தின் சார்பில் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு கோல போட்டி மற்றும் சிறுவர் சிறுமிகளின் விளையாட்டு போட்டி ராசிபுரம் நகர கழக செயலாளர் M.பாலசுப்பரமணியன் அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வார்டு செயலாளர்கள் RE. குமார், B. சர்தார், அவர்களின் முன்னிலையில் 1வது வார்டு நகரமன்ற உறுப்பினர் T.மகாலட்சுமி,T கார்த்தி அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்று அப்பகுதியில் சிறப்பாக வண்ண வண்ண கோலங்கள் போட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட அவை தலைவர் கந்தசாமி, நகர அவை தலைவர் கோபால், நகர துணைசெயலாளர் வாசுதேவன், மாவட்ட பிரதிநிதி ஜெகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர், வழக்கறிஞர் பூபதி, வார்டு செயலாளர்கள் செல்லமுத்து, ஸ்ரீதர், பரமேஸ்வரன், சரவணன், ஹிட்லர், மகளிர் அணி மகேஸ்வரி, சகிலா ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Next Story
