மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாள்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமையில் ஊர்வலம் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை
Tiruchengode King 24x7 |17 Jan 2026 4:00 PM ISTமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில்திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி தலைமையில் ஊர்வலம் அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப் படத்திற்குஅதிமுகவினர் மலர் தூவி மரியாதை
மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் அஇ அதிமுகநிறுவனமான எம்ஜிஆர் முன்னிட்டு திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருகேசன் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வக்கீல் சந்திரசேகர் திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர்எஸ் ஆர் எம் டி சந்திரசேகர்மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் பரணிதரன்,தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்லப்பன், நகர அம்மா பேரவை செயலாளர் நகர்மன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் பழராமலிங்கம், நகர் மன்ற உறுப்பினர் மல்லிகாஆகியோர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் இளைஞர் இளம் பெண்கள் பாசறையினர் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு பொன் சரஸ்வதி உள்ளிட்ட அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
Next Story


