காங்கேயத்தில் 11 பவுன் நகை திருட்டு வழக்கில் தேடப்பட்ட இரண்டு பேர் கைது
Kangeyam King 24x7 |26 July 2024 3:02 PM GMT
காங்கேயத்தில் 11 பவுன் நகை திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை காங்கேயம் காவல்துறை கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேயம் அருகே உள்ள வீரனம்பாளையம் ஊராட்சி அர்த்தநாரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (வயது 48). இவர் காங்கேயத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வீரணம் பாளையம் பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தங்கவேல் தினசரி காலை தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு மாலை அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி காலை வழக்கம் போல் தனது மனைவி மற்றும் மகள்களை பள்ளியில் விட்டுவிட்டு வேலை சென்று விட்டார். பின்னர் மாலை சுமார் 5 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு மற்றும் வீட்டிலிருந்து பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்து சுமார் 11 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருட சென்றது தெரிய வந்தது. காங்கேயம் காவல் ஆய்வாளர் காமராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடததி வந்தர். இந்த நிலையில் சுமார் 8 மாதத்திற்கு பிறகு தற்போது காங்கேயம் காவல் ஆய்வாளர் பணியாற்றி வரும் விவேகானந்தன் இந்த திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்று போலீசார் திருப்பூர் வீரபாண்டி ஏபி நகர் பகுதியில் சேர்ந்த விக்னேஷ் (28), கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் காட்டு விலைப் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபன் (38) ஆகிய இருவரையும் கைது செய்து காங்கேயம் நீதிமன்றத்தில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story