அரசு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கினார் எம்எல்ஏ!

அரசு பள்ளி மாணவர்கள் வேண்டுகோள் ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கினார் எம்எல்ஏ!
அரசு செய்திகள்
விராலிமலை தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் விருதாபட்டி ஊராட்சியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும் வழியில் கவரப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார். அங்கு பள்ளியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்ட அவரிடம், பள்ளிக்கு கூடுதலாக பெஞ்ச், மேஜைகள் மற்றும் ஆண்கள் கழிப்பிடம் அமைத்து தர வேண்டும் என்று மாணவ, மணவிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் பெஞ்ச், மேஜை வாங்கவும், ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிப்பிடம் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கோரிக்கை விடுத்த மாணவ, மாணவிகளை பாராட்டினார்.
Next Story