கரூரில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
Karur King 24x7 |5 Oct 2024 7:42 AM GMT
கரூரில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கரூரில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் (மாநில மையம்) மாநில செயற்குழு கூட்டம் மற்றும் ஓய்வு பெற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மாநில தலைவர் பொன் .ஜெயராம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார், மாநில பொது செயலாளர் வினோத்குமார், மாநில துணைத்தலைவர்கள் பாண்டித்துரை, திருப்பதி, ராஜேஷ், தேவசேனா மற்றும் மாநில செயலாளர் எழில் இளம் வழுதி, பேச்சியம்மாள், டேவிட் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பட்டப்படிப்பு மற்றும் பிஎட் முடித்த தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பணி வழங்க கோரியும், மாவட்டங்களில் செயல்படும் அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அமைச்சக பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும், அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேர்முக உதவியாளர் பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் எனவும், மாவட்டங்களில் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார வள மையங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் அலுவலக பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அக்டோபர் 10ஆம் தேதி அன்று பெருந்திரல் முறையீடு நடத்தி, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனுவினை அனைத்து உயர் அலுவலர்களுக்கும் அனுப்புவது எனவும், அடுத்த கட்ட போராட்டமாக நவம்பர் 6ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
Next Story