ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறை 11-ஆவது மாநில மாநாடு நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |22 Dec 2024 12:27 PM GMT
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 11 ஆவது மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம்தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 11 ஆவது மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம் நடைபெற்றது தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 11 ஆவது மாநில மாநாடு பிப்ரவரி 25 ஆம் நாள் ராமநாதபுரத்தில் மிகப்பெரிய அளவில் நடத்துவது என திட்டமிடப்பட்டு அதற்கான வரவேற்பு குழு கூட்டம் ராமநாதபுரத்தில் உள்ள வளர்ச்சித் துறை மஹாலில் நடைபெற்றது கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார் மாநாட்டின் நோக்கமாக ஊராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்கள் பிரிக்க வேண்டும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைப்பதை கைவிட வேண்டும் சி பி எஸ் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் ஒப்படைப்பு விடுப்பை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ராமநாதபுரம் மாவட்டத்தில் 11வது மாநில மாநாடு நடத்துவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான கோரிக்கை கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைப்பது அதன் பின்பு இயக்கம் நடத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு எழுச்சியோடு தெரிவித்து தமிழகத்தில் உள்ள சுமார் 8000 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் சிறப்பு திருமணம் நிறைவேற்றப்பட்டதாக மாநில தலைவர் தெரிவித்தார்
Next Story