இளைஞர் 11 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது., அவருக்கு உடந்தையாக இருந்த தாய்,சித்தி உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..*
Virudhunagar King 24x7 |18 Jan 2025 12:42 PM GMT
இளைஞர் 11 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது., அவருக்கு உடந்தையாக இருந்த தாய்,சித்தி உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விலை உயர்ந்த பைக் வாங்கி ஒரு பெண்ணை ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்த இளைஞர் 11 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது., அவருக்கு உடந்தையாக இருந்த தாய்,சித்தி உட்பட மூவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆண்டாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் 70 வயது மூதாட்டி முத்துலட்சுமி இவரது மகன் கணேசன் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டிற்கு அடுத்த வீட்டில் மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அக்டோபர் ஐந்தாம் தேதி மூன்றாவது சனிக்கிழமை அன்று மூதாட்டி அவரது வீட்டில் பீரோவிலுள்ள 11 பவுன் மொத்த எடை கொண்ட இரண்டு தங்க செயின்களை கழுத்தில் அணிந்து விட்டு மீண்டும் பீரோவில் வைத்துள்ளார். பின்னர் கடந்த 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று செயினை கழுத்தில் அணிவதற்கு பீரோவை திறந்து பார்க்கும்போது மொத்த எடையுள்ள 11 பவுன் இரண்டு தங்க செயின்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது மகன் கணேசன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து நகர் காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து நகர் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆண்டாள்புரம் பகுதிக்கு அருகே உள்ள மாயாண்டிபட்டி தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் காளிராஜ் வயது 19 என்ற இளைஞர் மூதாட்டி வீட்டில் இல்லாத போது மின் மீட்டர் பெட்டி மீது வைத்திருந்த அவரது வீட்டுச் சாவியை நோட்டம் கண்டு எடுத்து வீட்டுக்குள் புகுந்து மொத்தம் 11 பவுன் எடையுள்ள இரண்டு தங்க செயின்களை எடுத்து தனது தாய் பத்மாவதி வயது (34), சித்தி ஆனந்தவல்லி வயது (29) சம்மதத்துடன் இவர்கள் பெயரில் தனியார் நகை அடகு வைக்கும் இரண்டு நிதி நிறுவனத்தில் இளைஞர் நகையை அடகு வைத்து அதில் வந்த பணத்தில் விலை உயர்ந்த பைக் ஒன்றை வாங்கி சுற்றிக்கொண்டு ஒருதலைப் பட்சமாக ஒரு பெண்ணை காதலிப்பதற்காக அடிக்கடி வலம் வந்துள்ளார் என்று காவல்துறையினருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் இளைஞர் காளிராஜ் மற்றும் திருட்டு நகையை அடகு வைக்க உடந்தையாக இருந்த அவரது தாய் பத்மாவதி,சித்தி ஆனந்தவல்லி மூவரையும் நகர் காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு இவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story