அருள்மிகு ஸ்ரீ ஊரணிக் கரை ஓம் கணபதி திருக்கோவிலின் 11 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு...*

X
விருதுநகரில் வீற்றிருக்கு அருள்மிகு ஸ்ரீ ஊரணிக் கரை ஓம் கணபதி திருக்கோவிலின் 11 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா - ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு... விருதுநகர் லட்சுமி நகரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஊரணிக்கரை ஓம் கணபதி திருக்கோவிலின் 11 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டும், முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருநாலும் ஒன்று சேர இன்று அமைந்ததது சிறப்பு வாய்ந்ததாகும் விருதுநகர், லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், மீனாட்சி நகர், சிவஞானபுரம் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கையில் காப்புகட்டி விரதமிருந்து ஊரணிக்கரை ஓம் கணபதிக்கு பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து பாலாபிஷேகம் செய்தனர். பின்னர், இந்த அபிஷேகத்தில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் இந்த நிகழ்சிக்கான ஏற்பாட்டினை விழாக்க கமிட்டியினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்
Next Story

