மை டெத் மை ஹேப்பி என எழுதி வைத்துவிட்டு 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

மை டெத் மை ஹேப்பி என எழுதி வைத்துவிட்டு 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
X
ஜெயங்கொண்டத்தில் மை டெத் மை ஹேப்பி என எழுதி வைத்துவிட்டு 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதி மக்களுடைய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் பிப்18- மை டெத் மை ஹேப்பி என எழுதி வைத்துவிட்டு 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மேலக்குடியிருப்பு கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் பர்மா பாண்டியன், சரஸ்வதி இவர்களது மகள் தேஜல் (16) அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து கொண்டு தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நாளை நடைபெற உள்ள பிராக்டிகல் பரீட்சைக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்துள்ளார். மாணவி தேஜல் பள்ளிக்கு வராததால் அவருடன் படிக்கும் சக மாணவர்கள் தேஜல் வீட்டிற்கு வந்துள்ளனர் வீட்டின் கதவு உள்ளே தாழிட்டு இருந்தது. இது குறித்து மாணவியின் பாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேஜல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் இறந்த மாணவி தனது நோட்டில் மை டெத் மை ஹேப்பி என எழுதப்பட்டிருந்தது. மேலும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story