சூதாட்டம் ஆடிய 11 பேர் கைது

சூதாட்டம் ஆடிய 11 பேர் கைது
X
குமாரபாளையத்தில் சூதாட்டம் ஆடிய  11 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் பல இடங்களில் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவதாக தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர் ஆற்று பாலம், ரிலையன்ஸ் பங்க் பாலம் அருகில் ஆகிய இடங்களில் மூன்று குழுவினர்  சூதாட்டம் ஆடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சேலம், குமாரபாளையம், உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பிரவீன்குமார், 26, தன்ராஜ், 29, பரமசிவம், 58, ராமலிங்கம், 26, ராம், 56, ரூபன் சக்ரவர்த்தி, 33, சரவணன், 40, பாலமுருகன், 28, கேசவராஜ், 23, பாலாஜி, 20, நந்தகுமார், 28, ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story