செஞ்சியில் 11 பேட்டரி வண்டி ஊராட்சிகளிடம் ஒப்படைப்பு

X

கொடியசைத்து முன்னாள் அமைச்சர் தொடங்கி வைத்த
செஞ்சி ஒன்றிய வேலந்தாங்கல், கோணை, சத்தியமங்கலம், பாடிபள்ளம், ஆலம்பூண்டி உள்ளிட்ட 11 ஊராட்சிகளுக்கு துாய் மைப் பணிக்காக 44.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஒன்றிய சேர்மேன் விஜய குமார் தலைமை தாங்கி னார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் முன்னிலை வகித்தனர்.மஸ்தான் எம்.எல்.ஏ., ஊராட்சி தலைவர்களிடம் பேட்டரி வண்டி களின் சாவியை ஒப்படைத்தார்.செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார், ஒன்றிய செயலாளர் இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் டிலைட் ஆரோக்கியராஜ், பனிமலர் ராஜாராம், ஊராட்சி தலைவர்கள் அய்யனார், தாட்சாயணி, அபர்ணா, முத்தம்மாள், நீலாவதி, அம்பிகா, பிருந்தா சக்தி, சுபா, உள்ளிட்டஊராட்சி மன்ற தலைவர்கள், ஏ.பி.டி.ஓ.,க்கள் பழனி, குமார், அபிராமி கலந்து கொண்டனர்.
Next Story