காஞ்சிபுரத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்..!

காஞ்சிபுரத்தில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்..!
X
காஞ்சிபுரம் மாவட்டம் 34 ஆம் இடத்தையும், அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை 32 வது இடத்திலும் உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் +1 வகுப்பு அரசு பொது தேர்வில் 108 பள்ளிகளை சேர்ந்த 6786 மாணவர்களும் ,7445 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 231 பேர் தேர்வு எழுதினர். வினாத்தாள்கள் திருத்தப்பட்டு இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த +1 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 88.18 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 84.13 சதவீத மாணவர்களும், 91.87 சதவீத மாணவிகளும் என மொத்தம் 88.18 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசு பள்ளி 82.23 % தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகள் 32 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. தேர்வு முடிவுகள் படி காஞ்சிபுரம் மாவட்டம் 34 ஆம் இடத்தையும், அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை 32 வது இடத்திலும் உள்ளது.
Next Story