தூக்கு போட்டு 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

தூக்கு போட்டு 11ம் வகுப்பு மாணவி தற்கொலை
X
இரணியல்
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை  சேர்ந்தவர் முருகேசன் மகள் ரேஷ்மி தேவி (16). சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்தார். பின்னர் பற்றி அவரை இந்த கல்வி ஆண்டில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பில் சேர்த்தனர். அங்கு படித்து வந்த மாணவி இரண்டு நாள் விடுமுறைக்காக கடந்த வெள்ளிக்கிழமை ஊருக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அவரை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் மாணவி  கோயம்புத்தூர் செல்ல விருப்பம் இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.       நேற்று வீட்டில் இருந்த மாணவி ரேஷ்மி தேவி மதியம் சாப்பிட்டுவிட்டு படுக்கையறைக்கு சென்று விட்டார். மாலை நீண்டமாயிரம் ஆகியும் கதவை திறக்கவில்லை. ஆனால் அறையில் இருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தாயார் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர்  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மாணவி  ரேஷ்மி தேவி துப்பட்டாவில்  தூக்கமாட்டி தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி  எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. கோயம்புத்தூரில் உள்ள பள்ளிக்கு செல்ல மனம் இல்லாமல் தற்கொலை முயற்சி செய்தாரா? அல்லது வேறு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
Next Story