சிவகிரியில் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை

X
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த பூச்சன் என்பவர் மகன் பால் கண்ணன் (37) என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது சங்கரன்கோவில் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி மகேந்திர வர்மா அவர்கள் குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த சிவகிரி காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Next Story

