பெரம்பலூரில் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா

ஊர்வலம் கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு, பாலக்கரை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக கோயிலை அடைந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் சாய்பாபாவிற்கு பால், பண்ணீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் செய்யப்பட்டு தொடர்ந்து இரவு 7 மணியளவில் மகாதீபாரணை நடந்தது. நாள்முழுவதும் அன்னதானம் நடந்தது.
பெரம்பலூரில் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு 11 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி 11ம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடந்தது. பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி காலை 9 மணியளவில் மகாகணபதி ஹோமத்துடன் பூஜை பூர்வாங்க பணிகள் துவங்கியது. இதை தொடர்ந்து 12 மணியளவில் மகாதீபாரணை நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தியும் நடந்தது. மாலை 4 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜர் வளைவு, பாலக்கரை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக கோயிலை அடைந்தது. பின்னர் மாலை 6 மணியளவில் சாய்பாபாவிற்கு பால், பண்ணீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் செய்யப்பட்டு தொடர்ந்து இரவு 7 மணியளவில் மகாதீபாரணை நடந்தது. நாள்முழுவதும் அன்னதானம் நடந்தது. விழாவில் சாய்பாபா அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story