காங்கேயம் அருகே தனியார் பள்ளியில் மரம் முறிந்து விழுந்து 11ஆம் வகுப்பு மாணவன் பலி
காங்கேயம் சிவன்மலை அருகே ஜேசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு கணினி அறிவியல் பிரிவில் பயின்று வருபவன் அக்ஷ்யன் (15). காங்கேயம் திருப்பூர் ரோடு சௌடாம்பிகை நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.மாணவரின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பணயபட்டி ஆகும் . மாணவனின் தாய் தேவி தந்தை ராஜ்குமார் இவர் காடையூர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் பணிபுரிந்து வருகிறார்..மேற்படி மாணவருக்கு சர்வேஷ் குமார் என்ற ஒரு மூத்த சகோதரர் உள்ளார். சர்வேஷ் குமார் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு கலந்தாய்வுக்காக காத்திருப்பில் உள்ளார். இந்நிலையில் இன்று பள்ளிக்கு சென்றுவிட்டு மலை சிறப்பு வகுப்பு செல்வதற்கு முன் 3 மாணவர்களுடன் கழிவறைக்கு சென்றுவிட்டு வகுப்புக்கு திரும்பி சென்றுள்ளனர். அப்போது வேப்ப மரம் முறியும் சந்தம் கேட்கவே அருகில் இருந்த மாணவ மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர். அதனால் 3 மாணவர்களும் தனித்தனியாக ஓடியுள்ளார். இதில் அக்ஷ்யன் ஓடிய திசையில் மரம் விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாணவன் ரத்தவெள்ளத்தில் அலறியுள்ளான். உடனடியாக பள்ளி வாகனத்தில் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவன் இறந்ததாக தெரிவித்தனர். இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இறந்த மாணவனின் உடல் காங்கேயம் அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காங்கேயம் காவல்துறை விசாரணை.மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




