தேனி நகராட்சி ஆணையரின் வீட்டில் 11 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை முடிவு

தேனி நகராட்சி ஆணையரின் வீட்டில் 11 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை முடிவு
X
லஞ்ச ஒழிப்புத்துறை
தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வருபவர் ஏகராஜ், இவர் இதற்கு முன்பு பணிபுரிந்த இடத்திலும் தற்போது தேர் நகராட்சி ஆணையராக பணி புரிந்த போதும் லஞ்சம் வாங்கி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலகத்தில் இவருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் இந்த வழக்கின் தொடர்பாக தேனி நகராட்சி குடியிருப்பில் உள்ள நகராட்சி ஆணையர் ஏகராஜ் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர் உடல் நல பாதிப்பு காரணமாக கடந்த 10 நாட்களாக விடுப்பு எடுத்து ஏக ராஜ் தனது எந்த ஊரில் தங்கி உள்ள நிலையில் தேனியில் பூட்டி இருந்த அவரது வீட்டில் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் சுத்தியல் வைத்து பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டனர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ்வரி தலைமையில் ஐந்து பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர் இதேபோல் நகராட்சி ஆணையர் ஏகராஜ் தற்போது தங்கி ஓய்வெடுத்து வரும் தனது சொந்த ஊரான திருவள்ளூரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் தேனியில் உள்ள நகராட்சி ஆணையரின் வீட்டில் காலை 8 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு 7 மணி அளவில் முடிவு பெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர் சோதனை முடிவில் அவர் வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்
Next Story