கந்திலி அருகே 11 மாத குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக சடலத்தை தோண்டி எடுத்து ஆய்வு

கந்திலி அருகே 11 மாத குழந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக சடலத்தை தோண்டி எடுத்து ஆய்வு மேர்கொண்டு வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே 11 மாத குழந்தையின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ததால் பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயக்கன்டா ஊராட்சி பத்ரிக்கானூர் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் இவரது மனைவி முத்துலட்சுமி இவர்களுக்கு ஏற்கனவே அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எண்ணி நான்காவதாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் போது வழக்கம் போல கஜல் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மகப்பேறு சம்பந்தமான சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ராஜ்குமார் முத்துலட்சுமி தம்பதியருக்கு நான்காவதாக பெண் குழந்தை பிறந்து 11 மாத கால இடைவெளியில் அந்தக் குழந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் 17 ஆம் தேதி சிகிச்சைக்காக கஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்து மருந்து மாத்திரை குழந்தைக்கு கொடுத்துள்ளனர் அதன் பிறகு அன்று இரவு 18 ஆம் தேதி இறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இறந்த குழந்தையின் பெற்றோர் கஜல் நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை கோளாறு காரணமாக தன்னுடைய குழந்தை இறந்து விட்டதாக குற்றச்சாட்டை எழுப்பிய நிலையில் கஜல் நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அலுவலர் உஷா தேவி ஏற்கனவே இந்த தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்ததால் நான்காவது குழந்தையை கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கந்திலி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில்... நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா தலைமையில் மருத்துவக் குழுவினர் மற்றும் காவல்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மேற்பார்வையில் பத்திரிகானூர் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட 11 மாத பெண் குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரேத பரிசோதையின் முழுமையான தகவல்கள் வெளிவந்த பிறகு குழந்தை இறப்பதற்கான முழு காரணம் தெரிய வரும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story