பக்கெட் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலி

பக்கெட் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலி
X
ஸ்ரீபெரும்புதூரில் பக்கெட் நீரில் மூழ்கி 11 மாத குழந்தை உயிரிழப்பு போலீசார் விசாரணை
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர், 38. ஸ்ரீபெரும்புதுார் நேரு தெருவில் வாடகைக்கு தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவரது மனைவி நுாபுலட்சுமி, 26, தம்பதிக்கு மித்ரன், 3, என்ற மகனும், தியா என்ற 11 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சங்கர் வேலைக்கு சென்ற நிலையில், இரு குழந்தைகளுடன் நுாபுலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது, பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மித்ரனை பார்க்க நுாபுலட்சுமி சென்றார். அப்போது, வீட்டின் உள்ளே விளையாடிக் கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை தியா, அருகே உள்ள கழிப்பறைக்கு தவழ்ந்து சென்று, அங்கு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிந்த பிளாஸ்டிக் பக்கெட்டில் விழுந்து மூழ்கியது. இதை கண்ட தாய் நுாபுலட்சுமி, குழந்தையை மீட்டு ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story