போக்சோ வழக்கில் 11 ஆண்டுகள் சிறை

X
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக தாடிக்கொம்பு, அழகுப்பட்டியை சேர்ந்த செல்வமுருகன் (எ) முருகன்(50) என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், செல்வமுருகனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story

