தேனி அருகே வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த 11-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி கால் தவறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழப்பு

X
தேனி அருகே பழனிசெட்டிபட்டி வாசவி காலனி பகுதியில் வசித்து வருபவர் விவேகானந்தன் இவர் மெடிக்கல் வைத்து தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி ரேணுகா தேவி செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் மூத்த மகள் சென்னையில் படித்து வரும் நிலையில் இரண்டாவது மகள் சஷ்மிதா தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய சஷ்மிதாவை தந்தை விவேகானந்தர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு பணிக்கு திரும்பியுள்ளார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த சிறுமி கால் தவறி கீழே விழுந்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் தாய் மற்றும் பாட்டி பதறிப் போய் சிறுமியை மீட்டுள்ளனர் உடனே சிறுமியின் தந்தைக்கும் தகவல் கூறி வரவழைத்துள்ளனர்.இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமிக்கு தலை, முகம் மற்றும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது இதனை அடுத்து சிறுமியின் தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் குடும்பத்தினர்.கதறி அழுது துடித்துள்ளனர்.இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வீட்டு மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் தாய் தந்தை மற்றும் குடும்பத்தினர் சிறுமியின் இழப்பை தாங்க முடியாமல் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்
Next Story

