வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது

வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
X
வெள்ளகோவில் பணம் வைத்து சூதாடிய 11 பேரை காவல்துறை கைது செய்தனர்
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையம் அருேக, பழனி கவுண்டன்வலசு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடந்ததை போலீசார் கண்டனர். இதனையடுத்து அங்கு பணம் வைத்து சூதாடிய கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி (வயது 40), செட்டியார்பாளையம் மணி(52), முத்தூர் முருகம்பாளையம் சண்முகம் (40), தென்னங்கரைபாளையம் செல்வன்(46), வாலிபனங்காடு கணேஷ்(51), ஈரோடு மாவட்டம் கல்லேரி தங்கராசு (51), தாண்டாம்பாளையம் சந்திரசேகர் (23), சுபாஷ் (25), தம்பிரான் வலசு முருகேஷ்(60), கவின்குமார்(26), கரூர் மாவட்டம் குழந்தபாளையம் கோகுல் (26) என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட் டுகள், ரூ.16 ஆயிரத்து 470 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story