பள்ளிக் கல்வித் துறை சார்பில் 11- 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கலைத்திறன் போட்டிகள்

X
Komarapalayam King 24x7 |3 Jan 2025 7:50 PM ISTகுமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வி துறை சார்பில் மாநில அளவிலான பிளஸ் ஒன் பிளஸ் டூ மாணவ மாணவிகளுக்கான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது இதில் தமிழகம் முழுவதும் இருந்து 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவிகளிடம் கலைத்திறனை வளர்க்கும் விதமாகவும் அழிந்து வரும் நாடகக் கலை மற்றும் ஓவியக் கலை உள்ளிட்ட பல்வேறு கலை துறை வளர்ச்சி அடைய செய்யும் வகையிலும் மாணவ மாணவிகளிடம் கலைத்திறன் போட்டிகள் நடைபெற்று வருகிறது முதலில் வட்டார அளவில் நடத்தப்பட்ட ட்ரைப் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற செய்து அவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர் அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஜனவரி 3 மற்றும் நான்காம் தேதிகளில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தனியார். (எக்ஸெல்) பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான போட்டியில் பங்கு பெற சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்ததெருக்கூத்து, வீதி நாடகம், இலக்கிய நாடகம், பானை ஓவியம், களிமண் சிற்பம் காகிதக்கூழ் பொருட்கள் செதுக்கும் சிற்பம், தனி நபர் நடிப்பு, பல குரல், பேச்சு மற்றும் பாவனை நடிப்பு பொம்மலாட்ட குழு, மணல் சிற்பம், உள்ளிட்ட 11 கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் நிகழ்ச்சியை எக்ஸெல் பொறியியல் கல்லூரி தாளாளர் நடேசன் துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் கைவண்ணத்தை காட்டினர். இந்நிகழ்ச்சியில் குமாரபாளையம் விஜய கண்ணன் துணைத் தலைவர் வெங்கடேசன் பள்ளிபாளையம் திமுக ஒன்றிய வடக்கு பொறுப்பாளர் நாச்சிமுத்து ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story
