ஒரே நாள் இரவில் 11 அடி உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை.
Periyakulam King 24x7 |13 Aug 2024 6:19 AM GMT
சோத்துப்பாறை அணை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் நேற்று மாலை நிலவரப்படி 115.78 அடியாக இருந்தது. இந்த நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து 6 கன அடியில் இருந்து 226 கன அடியாக உயர்ந்தது. இதனை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 8 மணி நேரத்தில் 11 அடி உயர்ந்து அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும் அணைக்கு நீர்வரத்து 226 கன அடியாக உள்ள நிலையில் அணைக்கு வரும் 226 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. எனவே பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, குள்ளப்புரம் வராக நதி ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, வேண்டாம் என பொதுப்பணி துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story