திருவிடைமருதூா் சட்டமன்றத் தொகுதியில் பிப்.11 செவ்வாய்க்கிழமை மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் 5 இடங்களில் நடக்கிறது

X
அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு நிலையான வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புறங்களிலும், ஊராட்சிப்பகுதிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி ”மக்களுடன் முதல்வர் திட்டம்” நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில், ஆதிதிராவிடர் குடியிருப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதிகளில் சம்மந்தப்பட்ட துறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளவும், திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 11.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில், நாச்சியார்கோயில் ஊராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்திலும், செம்மங்குடி ஊராட்சி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திலும், மாங்குடி ஊராட்சி செயலகத்திலும், தேப்பெருமாநல்லூர் ஊராட்சி அபிராமி திருமண மண்டபத்திலும், திருமங்கலக்குடி ஊராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும், சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் 30 நாட்களில் மக்களுக்கு வழங்கப்படும்" என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story

