ராசிபுரம் அருகே 11கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் 105 விவசாயிகளுக்கு பட்டா வழங்கல்: அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்று வழங்கினர்..

ராசிபுரம் அருகே 11கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் 105 விவசாயிகளுக்கு பட்டா வழங்கல்: அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்று வழங்கினர்..
X
ராசிபுரம் அருகே 11கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் 105 விவசாயிகளுக்கு பட்டா வழங்கல்: அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பங்கேற்று வழங்கினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கிலியன்கோம்பை பகுதியில் நாரைக்கிணறு,மத்துருட்டு பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கினர். விழாவில் அமைச்சர் மா.மதிவேந்தன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் பேசுகையில் ஏற்கனவே இப்பகுதியில் மட்டும் இதுவரை 47 கோடி மதிப்பீட்டில் 967 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது, மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 பட்டாகள் உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் நாரைக்கிணறு நிலவரி திட்டத்தின் கீழ் சுமார் 105 விவசாயிகளுக்கு ரூ.11கோடியை 58 லட்சம் மதிப்பீட்டிலான சுமார் 113 ஏக்கர் நிலத்திற்கான பட்டா வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கா.ப.சரவணன் உள்ளிட்டோர் அரசு அலுவலர்கள் பங்கேற்றன். தொடர்ந்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையடுத்து உரம்பு பகுதியில் நடைபெற்ற கபடி, ஓட்டப்பந்தயம், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம்,கேடயம் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story