குமரி : 1.100 கிலோ கஞ்சா பறிமுதல்

X
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 1.100 கிலோ கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்தனர். இதில் பள்ளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ராகுல்(20) மற்றும் ஆனந்த் என்பவரின் மகன் வளன்மேஸ்லினோ (19), ▫️நாகர்கோயில் பகுதியை சேர்ந்த வேலாயுதம் பிள்ளை என்பவரின் கணேஷ் ராஜா (19) ▫️வடசேரி பகுதியை சேர்ந்த முத்து குமார் என்பவரின் மகன் ஆறுமுகம் (24), ▫️ கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் மகேஸ்வர் (22) மற்றும் விஜயன் என்பவரின் மகன் சூரிய (22) ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story

