மேட்டுப்பாளையத்தில் செவ்வாழை தார் ரூ.1,100-க்கு ஏலம் !

X
மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள காரமடை நாலுரோடு பகுதியில் உள்ள வாழைக்காய் ஏல மையத்தில் ஏலம் நடைபெற்றது. கருவலூர், வீரபாண்டி, பவானிசாகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 3,500 வாழைத்தார்களை கொண்டு வந்தனர். 20-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில், செவ்வாழை தார் அதிகபட்சமாக ரூ.1,100-க்கு விற்பனையாகியுள்ளது. கதலி கிலோ ரூ.60-67, நேந்திரன் ரூ.35-40, பூவன் தார் ரூ.250-750, தேன் வாழை ரூ.300-800, ரொபஸ்டா ரூ.250-650, ரஸ் தாளி ரூ.250-850, பச்சைநாடன் ரூ.200-500, மொந்தன் ரூ.200-350 ஆகிய விலையில் விற்பனையானது..
Next Story

