இராசிபுரம் நகராட்சியில், 1,104 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.77.57 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உட்பட பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.

இராசிபுரம் நகராட்சியில், 1,104 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.77.57 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உட்பட பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
X
இராசிபுரம் நகராட்சியில், 1,104 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.77.57 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உட்பட பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் (11.06.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் உதவி, 2024 -2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது, மாநில அளவில் நடைபெற்ற பன்முக கலாச்சார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசு மற்றும் நல உதவித்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகராட்சி, சுஜிதா திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். ச.உமா, அவர்கள் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 1,104 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் உறுப்பினர்களுக்கு ரூ.77.57 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் பேசியதாவது, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் (11.06.2025) மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் உதவி, 2024 -2025 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருது, மாநில அளவில் நடைபெற்ற பன்முக கலாச்சார போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இராசிபுரம், நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார் வட்டாரங்கள், இராசிபுரம் நகராட்சி, அத்தனூர், வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், ஆர்.புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி மற்றும் பட்டணம் பேரூராட்சிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 9,043 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,02,552 உறுப்பினர்களும் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 3,985 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 41,380 உறுப்பினர்களும் என மொத்தம் 13,028 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,43,932 உறுப்பினர்களின் சமூகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஊரகம் மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2021 – 2022 ஆம் ஆண்டு 9,081 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.499.20 கோடி மதிப்பிலும், 2022-2023 ஆம் ஆண்டு 10,751 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.658.62 கோடி மதிப்பிலும், 2023-2024 ஆம் ஆண்டு 10,082 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.674.69 கோடி மதிப்பிலும், 2024-2025 ஆம் ஆண்டு 14,516 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.886.00 கோடி மதிப்பிலும் மற்றும் 2025-2026 ஆம் ஆண்டு 1,562 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.113.96 கோடி மதிப்பிலும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெறும் விழாவில் 1,091 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.77.16 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டது. இவற்றில் ஊரக பகுதிகளில் 805 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு (7,549 பயனாளிகள்) ரூ.52.80 கோடியும், நகர்ப்புர பகுதிகளில் 286 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு (3,048 பயனாளிகள்) ரூ.24.36 கோடியும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 18 பயனாளிகளுக்கு இணை மானிய திட்டம் மற்றும் நுண் தொழில் சிறுகடனாக ரூ.41.00 இலட்சம் என மொத்தம் 1,104 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு (10,615 பயனாளிகள்) ரூ.77.57 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 2021 -2022 ஆம் ஆண்டு முதல் நாளது தேதி வரை 45,992 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2,832.47 கோடி வங்கி கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், போதமலையில் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பீட்டில், 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராசிபுரம் தொகுதியில் ரூ.53.39 கோடி மதிபில் அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் இராசிபுரம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்தார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையிலும், பெண்களின் வாழ்க்கை தரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதிகளவில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றபிறகு முதலில் கையெடுத்திட்ட திட்டம் மகளிருக்கான விடியல் பயண திட்டமாகும். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் புத்துணர்ச்சி பெறும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் கடன் தள்ளுபடி, வங்கிகளில் 5 பவுன் வரை நகை கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். ஏழை, எளிய குழந்தைகளின் பசியினை போக்கிட பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை, 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றவர்கள் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கலை, அறிவியில், செவிலியர் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி பயில்வதை ஊக்குவித்திட 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு, பெண்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களில் சுமார் 29,000 மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ரூ.1,000/- அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 6,500 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் அரசு பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் பயன்பெற வேண்டுமென்று அரசு தேர்வின் தமிழ் கட்டாய பாடத்தை அறிவித்தார்கள். இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று (11.06.2025) மகளிர் சுய உதவிக்குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இராசிபுரம் நகராட்சி, 8 பேரூராட்சிகள் மற்றும் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை மற்றும் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் ரூ.854.37 மதிப்பில் இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள்,விழாவிற்கு வருகை தந்த சுமார் 1500 மகளிருக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர்.கவிதா சங்கர், துணை தலைவர் திருமதி.கோமதி ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசாமி, அட்மா குழு தலைவர்கள் கே.பி.ஜெகநாதன், ஆர்.எம்.துரைசாமி, வெண்ணந்தூர் பேரூராட்சி தலைவர் ராஜேஷ், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) /திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) (பொ) சு.வடிவேல், உதவித்திட்ட அலுவலர் அ.காளிதாஸ், வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.
Next Story