கடலூர்: ஒரே நாளில் குவிந்த 1105 மனுக்கள்

X
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வேளாண் பயிர்க் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 1,105 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் சி.பி. ஆதித்ய செந்தில்குமார் அறிவுரை வழங்கினார்.
Next Story

