சாலை விபத்து நிவாரணத் தொகை என மொத்தம் 1152 பயனாளிகளுக்கு ரூபாய் 1,56,97,640 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினர்

X
அருப்புக்கோட்டையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா, சாலை விபத்து நிவாரணத் தொகை என மொத்தம் 1152 பயனாளிகளுக்கு ரூபாய் 1,56,97,640 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய உணவை சரியான முறையில் வழங்கப்படுகிறதா என பார்சலை பிரித்து பார்த்து ஆய்வு செய்த அமைச்சர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சாலை விபத்து நிவாரணத் தொகை 122 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை 691 பயனாளிகளுக்கும், ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும் வீட்டுமனை பட்டா ஒப்படைக்கான இணைய வழி பட்டா 50 நபர்களுக்கும் மற்றும் இலவச வீட்டு மனைபட்டா, உழவர் அட்டை, புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட மொத்தம் 1152 பயனாளிகளுக்கு ரூபாய் 1,56,97,640 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் பயனாளிகளுக்கு முட்டை பிரியாணி, தயிர் சாதம், தண்ணீர் பாட்டில் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட இருந்தது. நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள உணவுகள் சரியான முறையில் தரமாக வழங்கப்படுகிறதா என பார்சலை பிரித்து ஆய்வு செய்த பின் உடனடியாக பயனாளிகளுக்கு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

