தியாகதுருகத்தில் அண்ணாதுரை 116வது பிறந்த நாள் விழா

தியாகதுருகத்தில் அண்ணாதுரை 116வது பிறந்த நாள் விழா
விழா
தியாகதுருகம் ஒன்றிய நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டுதியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, 60 அடி உயர கம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.மலையரசன் எம்.பி., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் எத்திராஜ், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி, பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர், கட்சி நிர்வாகிகள் சாமிதுரை, ராதாகிருஷ்ணன், கணேசன், இளங்கோவன், சிவகுமார், அருட்செல்வன், பாலாஜி, அக்பர் உசேன், கோவி முருகன், சிலம்பரசன், அஜித்குமார், மகாதேவி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story