அமமுக வடக்கு மாவட்டம் சார்பில் அறிஞர் அண்ணா 116 .வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்..

அமமுக வடக்கு மாவட்டம் சார்பில் அறிஞர் அண்ணா 116 .வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்..
அமமுக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அறிஞர் அண்ணா 116 .வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம்.
அமமுக நாமக்கல் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் அறிஞர் அண்ணா 116 .வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம்.. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு. டிடிவி .தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிட உத்தரவிட்டிருந்தார். அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நாமக்கல் வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியில் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 116.வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் நாமக்கல் வடக்கு எஸ். பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ராசிபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் வி. ராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். நாமக்கல் வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட கழக செயலாளர் ஏ.பி. பழனிவேல், பேரறிஞர் அண்ணா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறினார். மேலும் அதன் வழியில் வந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா, அவர்களின் பொற்கால ஆட்சியை பொதுமக்கள் இடத்தில் எடுத்து கூறி தொடர்ந்து அமமுக கழகப் பொதுச் செயலாளர் 2026 இல் தமிழக முதல்வராக அரியணைஏரி பொதுமக்களுக்கு சிறப்பான ஆட்சியை நிச்சயம் வழங்குவார். இன்று தமிழ்நாட்டில் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன் நின்று எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரு தலைவன் இருக்கிறார் என்றால் அது டிடிவி தினகரன் அவர்கள் தான், எந்த மொழியில் கேள்வி கேட்டாலும் தனது பொன் சிரிப்புடன் அதற்கான பதிலை அளிக்கக்கூடிய சிறந்த தலைவர் எனவே நாடு போற்றும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை வழிநடத்தும் திறமை திரு டிடிவி அவர்களுக்கு மட்டும்தான் உண்டு என பெருமிதத்தோடு தெரிவித்தார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள், மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார். முன்னதாக பொதுக்கூட்ட மேடை அருகே அமைந்திருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோர் திருவுருவ சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்ட விழாவில் மாவட்ட கழக பொருளாளர் பி. அன்புச் செழியன், பொதுக்குழு உறுப்பினர் டி. உதயகுமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் பி. அம்பிகா, முன்னாள் இணைச் செயலாளர் இ.கே.திலகம், ராசிபுரம் கிழக்கு நகரக் கழக செயலாளர் டி. தர்மராஜ், ராசிபுரம் மேற்கு நகர கழகச் செயலாளர் எம். பூபதி, ராசிபுரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்.கே.கே. பாலசுப்பிரமணியம், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பராயன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் டி. சதீஷ்குமார், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், எருமப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் என். ஜெகநாதன், நாமகிரிப்பேட்டை பேரூர் செயலாளர் சி. பெரியசாமி, பட்டணம் பேரூர் செயலாளர் ரஞ்சித், சேந்தமங்கலம் பேரூர் செயலாளர் முருகேசன், புதுப்பட்டி பேரூர் செயலாளர் பி. வெங்கடாசலம், காளப்பநாயக்கன்பட்டி பேரூர் செயலாளர் எஸ். மகேந்திரன், ராசிபுரம் ஒன்றிய அவைத்தலைவர் வி. பாலசுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதி எம். ஆனந்தவள்ளி மெகஸ்தனிஸ், ஒன்றிய துணைத் தலைவர் எம். பிரபு, ஊராட்சி செயலாளர் போடிநாயக்கன்பட்டி கே. குமார், மற்றும் இறுதியாக மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ். மெகஸ்தனிஸ், நன்றியுரை வழங்கினார்.
Next Story