கோவை: 116 வழித்தடங்களில் மினி பஸ் சேவை தொடக்கம்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்த மினி பஸ் சேவையின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் 116 வழித்தடங்களில் மினி பஸ் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதை ஒட்டி, காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார், எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி உள்ளிட்டோர் பஸ்களுக்கு கொடியசைத்து சேவையை துவக்கினர். மொத்தமாக 30 மினி பஸ்கள் – மேட்டுப்பாளையம் பகுதியில் 8, கோவை வடக்கு 4, மேற்கு 15, தெற்கு 1, பொள்ளாச்சி பகுதியில் 2 பஸ்கள் இயக்கத்துக்கு வந்தன. குறைந்தபட்ச கட்டணம் ரூ.4, அதிகபட்சம் ரூ.11 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கிராமப்புற மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். அனைத்து சாலைகளிலும் இப்பஸ்கள் பயணிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. விழாவில் போக்குவரத்து மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், முன்னாள் எம்.எல்.ஏ. நா. கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story



