மாவட்டத்தில் 1160 விநாயகர் சிலை பிரதிஷ்டை

மாவட்டத்தில் 1160 விநாயகர் சிலை பிரதிஷ்டை
X
பிரதிஷ்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் 1160 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடந்தது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் ஏராளமான விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. புதுவீட்டு சந்து தெருவில் மைசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான, 15 அடி உயரம் கொண்ட லால் பக்ஜா ராஜ அலங்கார விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.திருவள்ளுவர் தெருவில் சிவன், பார்வதி, லிங்கம், கோமாதா உடன் கூடிய விநாயகர் சிலையும், எம்.ஆர்.என்., நகர் பகுதியில் கஜராஜன் விநாயகர் சிலையும், புதுவீட்டு சந்து தெருவில் குழந்தை விநாயகர், மார்க்கெட் தெரு பகுதியில் கற்பக விநாயகர் சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்டம் முழுவதும் 1,160 விநாயகர் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
Next Story