ப.உடையாபட்டியில் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 117 ஆம் ஆண்டு திருவிழா

8 நாட்கள் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பண்ணப்பட்டி ஊராட்சி ப.உடையாபட்டியில் புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 117 ஆம் ஆண்டு திருவிழா மற்றும் ஆலயத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நடந்தது. திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் ஆலயத்தை புனித படுத்தி, பின்னர் கோவில் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடியேற்றி திருப்பலி நடத்தி திருவிழாவை தொடங்கி வைத்தனர். அன்று முதல் 8 நாட்கள் ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலி நடைபெற்று புனித பெரியநாயகி அன்னையினை வழிபாடு செய்து வந்தனர். பின்னர் முதல் நாள் திருவிழாவின் போது காரைக்குடி சி.எஸ்.சி மாநகரி அருட்பணி ஜான்பீட்டர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் அன்று இரவு மின்னொலிகளால் அலங்கரிக்கப்பட்ட 3 சப்பாரங்களில், புனித பெரியநாயகி அன்னை உள்பட பல்வேறு சுறுவங்கள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கைகளுடன் ஆலங்களை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்தது. பின்னர் புனித பெரியநாயகி அன்னை உள்பட அனைத்து சுருவங்களும் ஆலங்களில் குடிபுகுந்தவுடன் திருப்பலிகள் நடைபெற்றது. 2வது நாள் திருவிழாவின் போது மறைமாவட்ட முதன்மை செயலாளர் அமல்ராஜ், புனே எஸ்.வி.டி. சிங்கராயர், திருச்சி காவிரிகலைத் தொடர்பாகம் இயக்குநர் ஜான்சன், மிசோரம் ஆரோக்கியசாமி, ஏர்போர்ட் பங்குத்தந்தை சகாயராஜ், ஆப்பிக்கா எம்.எஸ்.எப்.எஸ் ஆரோக்கயம், சென்னை சி.எஸ்.சி. டேவிட்பீட்டர் ஆகியோரின் கூட்டுத் திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. அன்று இரவு மின்னொலிகளால் அலங்காரம் செய்யப்பட்ட 5 சப்பாரங்களில் புனித பெரியநாயகி அன்னை உள்பட பல்வேறு சுறுவங்கள் வானவேடிக்கைகளுடன் வீதி உலா வந்தது. பின்னர் அதிகாலை அனைத்து சுருவங்களும் ஆலங்களில் குடிபுகுந்தவுடன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. 3வது நாள் அன்று காலை தவசிமடை பங்குத்தந்தை ஆரோக்கியசாமி, ஈரோடு பச்சாம்பளையம் அமல்ராஜ் ஆகியோர் இணைந்து திருவிழா நிறைவு மற்றும் புனித பெரியநாயகி அன்னை, பொதுமக்களுக்கு நன்றித் திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்குதல் நடந்தது. பின்னர் சிறப்பு திலுப்பலியை தொடர்ந்து ஆலயத்தின் முன்பாக ஏற்றப்பட்ட திருவிழா தொடக்கக் கொடியினை இறக்கப்பட்டு 117 வது திருவிழாவை முடித்து வைத்தனர். இந்த திருவிழாவில் காரியக்காரர் வின்சென்ட்லூர்துராஜ், ஊர் முக்கியஸ்தர்கள் செபதிஸ்தியான், சகாயராஜ், சேசுராஜ், கோவில்பிள்ளை உள்பட பூண்டி மாதா, அடைக்கலமாதா, பாத்திமாமாதா, ஆரோக்கியமாதா மற்றும் சகாயமாதா ஆலங்களின் அன்பர்கள், மாரீஸ்ட் சகோதரர்கள், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள், புனிதநிக்கோலாஸ் இளையோர் இயக்கம், புனித ஆக்னஸ் இளம் பெண்கள் இயக்கம், புனித வின்சென்ட் தேபவுல் சபை, ஆசிரியர்கள், ஊழியர்கள், திருவழிபாட்டுக் குழுவினர், மறைக்கல்வி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story