அமமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117.வது. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

X
Rasipuram King 24x7 |17 Sept 2025 9:02 PM ISTஅமமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117.வது. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமமுக நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழகம் அலுவலகம் முன்பாக மாவட்ட செயலாளர் ஏ.பி.பழனிவேல், தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117,வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அண்ணா அவர்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் அவைத் தலைவர் பன்னீர்செல்வம், நகரக் கழக செயலாளர்கள் தர்மராஜ், பூபதி, மகளிர் அணி திலகவதி, பொதுக்குழு உறுப்பினர் உதயகுமார், ஒன்றிய கழகச் செயலாளர் ராஜா, மற்றும் நிர்வாகிகள் ஜெயந்த், பழனிசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்..
Next Story
