கரூரில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.11,88,66,054-மதிப்பில் 1,827- வழக்குகளுக்கு தீர்வு.
Karur King 24x7 |14 Dec 2024 2:10 PM GMT
கரூரில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.11,88,66,054-மதிப்பில் 1,827- வழக்குகளுக்கு தீர்வு.
கரூரில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.11,88,66,054-மதிப்பில் 1,827- வழக்குகளுக்கு தீர்வு. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் படியும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும், கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் இன்று 14.12.24 தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் கரூரில் நான்கு அமர்வுகளும், குளித்தலையில் இரண்டு அமர்வுகளும், அரவக்குறிச்சியில் ஒரு அமர்வும், கிருஷ்ணராயபுரத்தில் ஒரு அமர்வும் என மொத்தம் 8 அமர்வுகள் நடைபெற்றது. இந்த அமர்வுகளில் 2033 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ.11,88,66,054/-மதிப்பிலான 1827 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்வினை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும்,மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். இதில் அனைத்து நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அனுராதா செய்திருந்தார்.
Next Story